ADDED : ஜூலை 07, 2024 02:12 AM
காரைக்குடி: கோவிலுாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை விசாரணை செய்தனர். பைக்கில் 150 கிராம் கஞ்சா மற்றும் இரும்பு வாள் இருந்தது.
விசாரணையில், திருப்புத்துார் காட்டம்பூரை சேர்ந்த ஜான் குமார்,காரைக்குடி வ.உ.சி., ரோடு பிரகாஷ் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்துகஞ்சா மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.