ADDED : ஜூலை 07, 2024 02:12 AM
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடி தெற்கு குடியிருப்பு, நொண்டி முனீஸ்வரர் கோயில் 48வது ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஜோடி மாடுகள், 11 குதிரை வண்டிகள் பங்கேற்றன.
அனுமதி பெறாமல் மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக கூறி இலுப்பக்குடி சரவணன் 39, அடைக்கலம் 50, காளிமுத்து 37, வைரவன் 30, செல்லதுரை 30, மீது அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.