காரைக்குடி,: காரைக்குடி பாண்டியன்நகர் 1வது வீதியை சேர்ந்தவர் செந்தில் மனைவி கிருஷ்ணவேணி 39.
நேற்று முன்தினம் இவரது வீட்டில் மின்சாரம்இல்லாததால் தனது வீட்டின் எதிரே உள்ள வீட்டில் தங்கி விட்டு காலையில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில்இருந்த 36 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது.
கிருஷ்ணவேணி புகாரின் பேரில் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.