ADDED : ஜூலை 07, 2024 02:11 AM

சிவகங்கை,: சிவகங்கை அருகே வேளாங்கபட்டி கிராமத்தில் ஆயி அம்மன், மாரநாட்டுக் கருப்பு, கட்டுச்சோறு கருப்பு கோயில் ஆனி பொங்கல் திருவிழா நடந்தது.
இந்த கோயிலில் மூன்றாண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். ஆனி முதல் வெள்ளிக்கிழமை ஜூன் 21 காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று கோயில் வளாகத்தில் மண்பானைகளில் முதலாவதாக ஆயி அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாநாடு கருப்பு சாமிக்கும், கட்டுச்சோறு கருப்பு சாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்து பொங்கல் வைத்தனர்.
நள்ளிரவு 12:00 மணி அளவில் பக்தர்களால் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 300 ஆடுகள் பலியிடப்பட்டன.
வெட்டப்பட்ட ஆடுகளின் மாமிசத்தை மண்பானையில் வைத்து சமைத்தனர். காலை 6:30 மணிக்கு பூஜை நடத்தி சமைத்த உணவுகளை மண்பானைகளில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொட்டலுக்கு கொண்டு சென்றனர். அங்கு 5000 பேருக்கு உணவு பரிமாறினர்.