/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம் பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
ADDED : ஜூலை 07, 2024 02:10 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான பிரான்மலைக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வந்து செல்கின்றனர்.
2015ம் ஆண்டு இம்மலையில் வெடிகுண்டு தயாரிக்க நடந்த முயற்சி போலீசாரால் தடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து பிரான்மலையில் தனியாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக பிரான்மலை இருப்பதால் கண்காணிப்பும் வாகன தணிக்கையும் இங்கு அவசியமாக உள்ளது. இங்கு செயல்பட்டுவந்த புறக்காவல் நிலையம் கடந்தாண்டு மூடப்பட்டு, சதுர்வேதமங்கலம் போலீசார் ரோந்து வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் முக்கிய தலமான இங்கு நிரந்தரமாக புறக்காவல் நிலையத்தை அமைத்து முழு நேரப்பணியில் போலீசாரை பணியமர்த்த வேண்டும்.