/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான மஞ்சள்பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான மஞ்சள்
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான மஞ்சள்
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான மஞ்சள்
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாரான மஞ்சள்
ADDED : ஜன 04, 2024 02:25 AM

காரைக்குடி: காரைக்குடியில் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் செடி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பொங்கல் தமிழரின் பாரம்பரிய திருவிழாவாக உள்ளது. பொங்கலன்று கரும்புக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது மஞ்சள் ஆகும். பொங்கல் பண்டிகையன்று பொங்கல் பானையில் மஞ்சள் கிழங்குகளுடன் கூடிய கொத்துகளை கட்டி, பச்சரிசி பொங்கல் வைத்து சூரியனுக்கும் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் படைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரியக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் செடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆடியில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு தற்போது தைப்பொங்கலுக்கு அறுவடைக்கு விவசாயிகள் தயார் படுத்தி வருகின்றனர்.