/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவலம்விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவலம்
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவலம்
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவலம்
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவலம்
ADDED : ஜன 06, 2024 05:53 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே காளையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட இடைக்காட்டூர் கண்மாய் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாததால் டேங்கர் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் பாய்ச்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த புக்குளி,ஆத்திவயல் மாதவன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காளையார் கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட இடைக்காட்டூர் கண்மாய் பாசனத்தை ஒட்டி உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இக்கண்மாய் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக துார்வாராததாலும், மடைகளை சீரமைக்காததாலும், தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் இக்கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை.
இப்பகுதியில் தற்போது நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர்கள் பரியும் நேரத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் டேங்கர் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி நெற்பயிர்களுக்கு பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், இடைக்காட்டூர் கண்மாய் பாசன பகுதிகளில் விவசாயிகள் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இக்கண்மாயை முறையாக துார்வாராததாலும், மடைகளை பராமரிக்காததாலும் கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை.
கடந்த சில நாட்களாக பெய்த மழையை நம்பி விவசாயம் செய்த நிலையில் தற்போது பயிர்கள் பரியும் நிலையில் தண்ணீர் இல்லாததால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகிறோம் என்றனர்.