/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/'அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்''அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்'
'அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்'
'அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்'
'அமைச்சர்கள் மட்டத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியல்'
ADDED : பிப் 23, 2024 10:28 PM
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மாநில அரசு கைவிட வேண்டும். நிதிக்குழு என்ன முடிவு செய்து இருக்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும்.
ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தபோது 30.5 சதவீதம் தான் மத்திய அரசாங்கத்தின் வருவாயில் மாநிலத்திற்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. 2014 வரை 32 சதவீதம் வரை கொடுக்கப்பட்டது.
2014 ல் மோடி பிரதமர் ஆன பிறகு அது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பா.ஜ.,வை பிரபலமாக விமர்சிக்க கூடிய தி.மு.க., எம்.பி., ஒருவர் டில்லி ஏர்போர்ட்டில் என்னிடம், இதே 42 சதவீதமாக நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது செய்திருந்தால் இந்நேரம் மாநிலத்தின் அதிகாரத்தை கூட்டியிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்திருப்போம். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் என்று ஆச்சரியத்துடன் கூறினார். மாநில ஜி.எஸ்.டி., 100 சதவீதம் மாநிலத்திற்கு தான் செல்கிறது. செஸ் வரி அது சார்ந்த அந்தந்த துறைகளுக்கு தான் செல்கிறது. மக்களிடம் தி.மு.க., பொய்களை பரப்புகிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி திட்டங்கள் மாநிலத்திற்கு துவக்கியிருக்கிறது.
தி.மு.க.,வில் முதல்வர் குடும்பம் மட்டுமல்லாமல் அமைச்சர்கள் மட்டத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது. பெரம்பலுாரில் கே.என்.நேரு மகனை வேட்பாளராக முடிவு செய்து விட்டார்கள்.
பா.ஜ., வில் மிகப்பெரிய பொறுப்பில் இல்லாதவர்கள் தான் முதல்வர் ஆகியிருக்கிறார்கள். பா.ஜ., மட்டுமே ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சி. வருகின்ற தேர்தல் பா.ஜ., மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகள் என்று தான் இருக்கும்.
இ.வி.எம்.,மில் மோசடி செய்ய முடியாது என்பதை இந்த தொகுதி எம்.பி., கார்த்தியே ஏற்றுக்கொண்டார் என்றார்.