Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!

ADDED : ஜூன் 09, 2025 08:04 PM


Google News
Latest Tamil News
புவனேஸ்வர்: தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.47 லட்சம் சிக்கியதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரிபுராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி திமான் சக்மா 36, ஒடிசாவின் கலஹந்தி மாவட்டத்தின் தரம்கர் பகுதியில் தற்போது பணியில் உள்ளார். 2021வது ஆண்டு பேட்ஜ் அதிகாரியான இவர் தற்போது தரம்ஹாரில் சப்-கலெக்டராக உள்ளார்.

இந்நிலையில் திமான் சக்மா, உள்ளூர் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய போது நேற்று கையும் களவுமான பிடிபட்டார். அதனை தொடர்ந்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.47 லட்சம் பணம் கட்டு கட்டாக சிக்கியது.

இது தொடர்பாக விஜிலென்ஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

குற்றம் சாட்டப்பட்ட திமான் சக்மா, கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் நேற்று ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டார். மேலும் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வேண்டும் என்றும் இல்லையெனில் அவரது தொழிலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினார். அதனை தொடர்ந்து, தரம்நகரில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபர் எங்களிடம் புகார் அளித்த நிலையில், புகார்தாரர் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்துடன் திமான் சக்மா வீட்டிற்கு சென்றார். அவரிடம் லஞ்சப்பணம் அளிக்கும்போது எங்களது அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரது அதிகாரப்பூர்வ வீட்டில் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக மேலும் ரூ.47 லட்சம் பணம் சிக்கியது.

இவ்வாறு விஜிலென்ஸ் துறை அறிக்கையில் கூறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us