/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தொடர் மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
ADDED : ஜூன் 24, 2024 01:40 AM
காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
இப்பகுதியில் போர்வெல் மூலமே அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் போர்வெல் மூலம் நெல் சாகுபடி செய்தனர். விதைநெல், உரம், உழவு செலவு என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவழிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நெல் பயிர் பரிந்து வரும் நிலையில் மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.