/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஒற்றுமை, மழை வேண்டி புரவி எடுப்பு : மானாமதுரையில் புரவிகள் தயார்ஒற்றுமை, மழை வேண்டி புரவி எடுப்பு : மானாமதுரையில் புரவிகள் தயார்
ஒற்றுமை, மழை வேண்டி புரவி எடுப்பு : மானாமதுரையில் புரவிகள் தயார்
ஒற்றுமை, மழை வேண்டி புரவி எடுப்பு : மானாமதுரையில் புரவிகள் தயார்
ஒற்றுமை, மழை வேண்டி புரவி எடுப்பு : மானாமதுரையில் புரவிகள் தயார்
ADDED : ஜூன் 24, 2024 01:40 AM
மானாமதுரை: நல்ல மழை மற்றும் கிராமங்களில் ஒற்றுமைக்காக கிராம கோயில்களில் புரவி எடுப்பு விழா நடைபெறும்.
இதற்காக மானாமதுரையில் புரவி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை வணங்கி, நல்ல மழை வேண்டியும், கிராம ஒற்றுமைக்காக புரவி எடுப்பு விழா நடத்தி வழிபட்டு வருகின்றனர்.தற்போது புரவிஎடுப்பு விழாவிற்காக மானாமதுரையில் அதிகளவில் புரவிகள் தயாராகி வருகின்றன. இங்கு, புரவிகள், காளை, சுவாமி சிலைகள், மனித உருவங்களை தயாரித்து வருகின்றனர். இங்கு, ஒரு புரவி செய்வதற்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை செலவாகிறது. கிராம கோயில்களில் விரதத்தை துவக்கி, இங்கிருந்த புரவிகளை வாங்கி செல்கின்றனர்.