ADDED : பிப் 24, 2024 05:46 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் நா. ராமேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் நா.ஆறுமுக ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் கேஆர். அமுதா வரவேற்றார். புரோ கபடி நடுவர் சிவநேசகுமரன் பங்கேற்றார்.
மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. மேலும் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம், பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. துணை முதல்வர் ஞா.அருள் சேவியர் அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.
* திருப்புத்துார் டி.இ.எல்.சி. பார்வையிழந்தோர் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
தவளை ஓட்டம், நண்டு ஓட்டம், ஸ்பூன் லிங், தண்ணீர் நிரப்புதல், நீளம்தாண்டுதல், ஓட்டப்பந்தயம் நடந்தன.
பாடல்களுக்கு இசைக்கருவிகள் மூலம் இசை வாசித்தனர். மகிபாலன்பட்டி ஊராட்சி சாலப்பட்டி லெட்சுமணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.