Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாயமங்கலம் கோயில்  விழாவிற்கு சிறப்பு பஸ் பொது மேலாளர் தகவல்

தாயமங்கலம் கோயில்  விழாவிற்கு சிறப்பு பஸ் பொது மேலாளர் தகவல்

தாயமங்கலம் கோயில்  விழாவிற்கு சிறப்பு பஸ் பொது மேலாளர் தகவல்

தாயமங்கலம் கோயில்  விழாவிற்கு சிறப்பு பஸ் பொது மேலாளர் தகவல்

ADDED : மார் 21, 2025 06:13 AM


Google News
சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருவிழாவிற்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக காரைக்குடி பொது மேலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி சுவாதி பெருவிழா மார்ச் 29 அன்று இரவு 10:20 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும் விழாவில் இரவு அம்மன் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் வீதி உலா வருவார்.

விழாவின் ஏழாம் நாளான ஏப்.,5ல் பொங்கல் வைபவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதி முன் பொங்கல் வைத்து வழிபடுவர். ஏப்.,6ம் தேதி இரவு 7:20 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மின்ரத பவனி நடைபெறும்.

ஏப்.,7ம் தேதி காலை 7:20 மணிக்கு பால்குட உற்ஸவமும், அன்று மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறும். ஏப்.,8ம் தேதி இரவு 7:40 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன்பங்குனி பெருந்திருவிழா நிறைவு பெறும்.

இத்திருவிழாவை காண தென் மாவட்ட அளவில் இருந்து ஆயிரக்கணக்கானபக்தர்கள் வருகை தருவர்.இவர்களின் போக்குவரத்து வசதிக்காக மார்ச் 29 முதல் ஏப்.,7ம் தேதி வரை காரைக்குடி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனுார்,கமுதி, காளையார்கோவில், இளையான்குடி, அருப்புக்கோட்டையில் இருந்து இரவு, பகலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us