ADDED : மார் 21, 2025 06:13 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே குலையனுாரைச் சேர்ந்த திருவேட்டை அய்யனார் மகன் ராஜா 34 இவர் மானாமதுரை சாஸ்தா நகரில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி சத்யா28 மகன்கள் திவாகர்8, தீக்சன் 6, ஆகியோருடன்டூவீலரில் மணக்குளத்திலிருந்து கொன்னக்குளத்திற்கு சென்றபோது எதிரே விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் ஜெயப்பிரகாஷ் 33, அவரது மனைவி பாண்டிச்செல்வி 30, ஆகியோர் மற்றொரு டூவீலரில் வந்தனர். எதிர்பாராத விதமாக இரு டூவீலர்களும் மோதிக்கொண்டதில் ராஜா பலியானார்.
அவரது மனைவி சத்யா, மகன்கள் திவாகர், தீக்சன் ஆகியோரும், மற்றொரு டூவீலரில் வந்த ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி பாண்டிச்செல்வி காயமடைந்தனர். மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.