ADDED : மார் 21, 2025 06:12 AM
காரைக்குடி : காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரியில் ஐ.டி., தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் ஹேமாமாலினி தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னேற்றங்களை பற்றியசிந்தனைகள் குறித்து பேசினார். ஐ.டி., துறைத்தலைவர் விசாலாட்சி உட்பட பலர் பேசினர்.
நிகழ்ச்சியில் காகித விளக்கக் காட்சி, கருத்தரங்கு, பிழை திருத்தம், சுவரொட்டி விளக்கக் காட்சி, வலைதள மேம்பாட்டு போட்டி, ஆவணப்படம், சொற்பொழிவு, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டது.