/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கச்சாத்தநல்லுாரில் தேங்கும் கழிவு நீர் கச்சாத்தநல்லுாரில் தேங்கும் கழிவு நீர்
கச்சாத்தநல்லுாரில் தேங்கும் கழிவு நீர்
கச்சாத்தநல்லுாரில் தேங்கும் கழிவு நீர்
கச்சாத்தநல்லுாரில் தேங்கும் கழிவு நீர்
ADDED : மே 22, 2025 12:11 AM

இளையான்குடி: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சாத்தநல்லுாரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்பதோடு மட்டுமில்லாமல் ரோடுகளிலும் கழிவுநீர் நிற்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்யும் மழையால் கழிவுநீரோடு மழை நீரும் சேர்ந்து அதிகளவில் தேங்கி வருவதால் கொசு தொல்லை உள்ளது.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக கச்சாத்தநல்லூரில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.