சிதைந்த சிறுவாச்சி கண்ணங்குடி ரோடு
சிதைந்த சிறுவாச்சி கண்ணங்குடி ரோடு
சிதைந்த சிறுவாச்சி கண்ணங்குடி ரோடு
ADDED : மே 22, 2025 12:12 AM

தேவகோட்டை: தேவகோட்டை நகரிலிருந்து சிறுவாச்சி கப்பலுார் வழியாக கண்ணங்குடிக்கு தார் ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் வழியாக 50க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்த கிராமங்களில் இருந்து தேவகோட்டைக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். மூன்று வழித்தடங்களில் பத்து முறைக்கு மேல் அரசு பஸ் இவ்வழியே செல்கிறது. இந்த ரோட்டில் சிறுவாச்சியில் இருந்து கப்பலுார் விலக்கு வரை நான்கு கிலோமீட்டருக்கு தார் ரோடு இருந்தாலும் தாரே இல்லாமல் கிராவல் ரோட்டை விட மோசமாக இருக்கிறது.
கற்கள் பெயர்ந்து ரோடு சிதைந்து பள்ளங்கள் நிரம்பி காணப்படுகின்றன. எட்டு வருடங்களாக இந்த ரோட்டில் சென்று வருவதாகவும் பிரச்னை தீரவில்லை என கிராமத்தினர் குமுறுகின்றனர். கலெக்டர் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.