/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கொல்லங்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம் கொல்லங்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்
கொல்லங்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்
கொல்லங்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்
கொல்லங்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 07, 2025 12:22 AM

சிவகங்கை: மதுரை -- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொல்லங்குடிக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர். இந்த ரோட்டில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் நெரிசல் காணப்படும்.
தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் இருபுறமும் 10 அடி துாரத்திற்கு ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன நெரிசல் அதிகரித்து அடிக்கடி விபத்தும் அதிகரிக்க துவங்கின.
இது குறித்து தினமலரில் செய்திகள் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பால சிங்காரவேலன், உதவி பொறியாளர் தயாநிதி, தாசில்தார் முபாரக் உசேன் தலைமையில் தேசிய நெடுஞ் சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.