/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கலெக்டர் அலுவலக வளாகத்தை சூழ்ந்த முட்புதர், குப்பை கலெக்டர் அலுவலக வளாகத்தை சூழ்ந்த முட்புதர், குப்பை
கலெக்டர் அலுவலக வளாகத்தை சூழ்ந்த முட்புதர், குப்பை
கலெக்டர் அலுவலக வளாகத்தை சூழ்ந்த முட்புதர், குப்பை
கலெக்டர் அலுவலக வளாகத்தை சூழ்ந்த முட்புதர், குப்பை
ADDED : ஜூன் 07, 2025 12:21 AM

சிவகங்கை,: மாவட்ட தலைநகரான சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் முட்புதர் மண்டியும், குப்பை தேங்கியும் கிடக்கிறது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர், எஸ்.பி., வனத்துறை, மாவட்ட கருவூலம், கல்வித்துறை, வணிகவரித்துறை, மின் வாரியம், மாவட்ட தொழில் மையம், பொதுப் பணித்துறை என அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான ஊழியர்களும், குறைகளை தீர்க்க கோரி மக்களும் வந்து செல்கின்றனர்.
இந்த கலெக்டர் அலுவலக வளாகம் விஷ-ஜந்துக்களின் கூடாரம் போல் முட்புதர் மண்டி காட்சி அளிக்கின்றன.
முட்புதர், குப்பை தேக்கம்
குறிப்பாக அலுவலகங்களில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க நகராட்சி துாய்மை பணியாளர்கள் வராததால், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அனைத்து குப்பைகளையும் கொட்டி வைத்துள்ளனர்.
அனைத்து அலுவலகங்கள் முன்பும் முட்புதர் மண்டியும், குப்பை தேங்கியும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
மாவட்ட அளவில் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் மாவட்ட அதிகாரிகள், தாங்கள் பணிபுரியும் அலுவலக வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.