ADDED : ஜூன் 13, 2025 11:41 PM

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு பாசன கண்மாய்களில் கருவேலமரங்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் இடையே பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
பன்றிகள் விவசாயத்தை அழித்து வருகின்றன.சிறுபாசன கண்மாய்களுக்கு புத்துயிர் ஊட்டுதல் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 442 கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை 34 கோடியே 30 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் அந்தந்த பகுதி கண்மாய் விவசாயிகளின் பங்களிப்புடன் அகற்ற முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.
மாவட்டத்தில் அதிகபட்சமாக காளையார்கோயில் தாலுகாவில் 80 கண்மாய்களில் ஏழு கோடியே 87 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவிலும், குறைந்த பட்சமாக மானாமதுரை தாலுகாவில் 23 கண்மாய்களில் ஒரு கோடியே 79 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் 30 சிறுபாசன கண்மாய்களில் இரண்டு கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் வேருடன் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.