ADDED : ஜூன் 13, 2025 11:41 PM

மானாமதுரை: மானாமதுரையில் இருந்து தெ. புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் ரோடு 6 மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.
இந்த ரோட்டில் ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அதிகளவு வாகன போக்குவரத்து இருக்கும்.
இந்த ரோட்டில் உள்ள சிறு பாலங்களுக்கு அருகில் ரோடு மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.