/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குடியிருப்புகளுக்குள் மீண்டும் மாட்டிறைச்சி கழிவு குடியிருப்புகளுக்குள் மீண்டும் மாட்டிறைச்சி கழிவு
குடியிருப்புகளுக்குள் மீண்டும் மாட்டிறைச்சி கழிவு
குடியிருப்புகளுக்குள் மீண்டும் மாட்டிறைச்சி கழிவு
குடியிருப்புகளுக்குள் மீண்டும் மாட்டிறைச்சி கழிவு
ADDED : ஜூன் 13, 2025 11:42 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மீண்டும் மாட்டிறைச்சிக் கழிவு கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இப்பேரூராட்சியில் சிறுவர்பூங்கா அருகே உள்ள மாணிக்கம் தெரு பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நகரில் இறந்த, வயதான மாடுகளை தோல், இறைச்சிக்காக இப்பகுதியில் அறுத்து எலும்பு, கழிவுகளை குடியிருப்புக்கு நடுவே கொட்டுகின்றனர். இது பற்றி மக்கள் புகார் தெரிவித்த நிலையில் சில வாரங்களாக கழிவு கொட்டுவது நிறுத்தப்பட்டது.
சில நாட்களாக மீண்டும் அப்பகுதியில் மாட்டின் எலும்பு, கழிவு கொட்டப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரம் முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
ஏற்கனவே அப்பகுதி மக்களுக்கு கிருமிகளால் நோய்த் தொற்று ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கழிவு கொட்டப்பட்டு, கழிவு நீர் தேங்கிக்கிடக்கிறது. அதிகாரிகள் இறைச்சிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.