ADDED : மே 30, 2025 03:17 AM

இளையான்குடி: இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ., தமிழரசி பரிசு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் மதியரசன், தமிழ்மாறன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, கண்ணமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் கண்ணன், சிவனேசன், மலைச்சாமி கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் அஜித்குமார், ராஜ்குமார் செய்திருந்தனர்.