/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோட்டில் வாகன ஆக்கிரமிப்பு தினமும் போக்குவரத்து நெரிசல் ரோட்டில் வாகன ஆக்கிரமிப்பு தினமும் போக்குவரத்து நெரிசல்
ரோட்டில் வாகன ஆக்கிரமிப்பு தினமும் போக்குவரத்து நெரிசல்
ரோட்டில் வாகன ஆக்கிரமிப்பு தினமும் போக்குவரத்து நெரிசல்
ரோட்டில் வாகன ஆக்கிரமிப்பு தினமும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 30, 2025 03:17 AM

தேவகோட்டை: தேவகோட்டை மெயின் ரோடான திருப்புத்துார் ரோட்டில் கடைகள் அதிகம் உள்ள பகுதியாகும். ரோட்டில் பல கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. வாடிக்கையாளர்களும் தங்களது வாகனங்களை கடை முன்பு நிறுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக மாந்தோப்பு வீதி சந்திப்பு அருகே ரோட்டோரம் டூவீலர், கார்கள் நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக எதிர் எதிரே வந்த இரண்டு அரசு பஸ்கள் உரசிக் கொண்டன. அவர்களுக்குள் பிரச்னை நிலவியது.
பஸ்களை உரசலில் இருந்து பிரித்து எடுக்க தாமதமானது.போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றி வாகன போக்குவரத்து எளிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.