/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை அரசு மருந்து கோடவுன் எதிரில் குப்பையில் மாத்திரைகள் சிவகங்கை அரசு மருந்து கோடவுன் எதிரில் குப்பையில் மாத்திரைகள்
சிவகங்கை அரசு மருந்து கோடவுன் எதிரில் குப்பையில் மாத்திரைகள்
சிவகங்கை அரசு மருந்து கோடவுன் எதிரில் குப்பையில் மாத்திரைகள்
சிவகங்கை அரசு மருந்து கோடவுன் எதிரில் குப்பையில் மாத்திரைகள்
ADDED : செப் 18, 2025 02:45 AM

சிவகங்கை:சிவகங்கை பனங்காடு ரோடு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மாவட்ட அரசு மருந்து கோடவுன் எதிரிலுள்ள குப்பையில் காலாவதியான கால்சியம் கார்பனேட் விட்டமின் டி3 மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன.
இம்மருந்து கோடவுன் எதிரிலுள்ள கால்வாயில் நேற்று 100க்கும் மேற்பட்ட காலாவதியான கால்சியம் கார்பனேட் விட்டமின் டி3 மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன. அனைத்து மாத்திரைகளிலும் டி.ஜி.,(தமிழ்நாடு அரசு) என ஆங்கில எழுத்துகள் உள்ளன. மருத்துவக் கழிவுகளை கொட்ட மேலாண்மை விதிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் வகுத்துள்ளது.
அதன்படி கையுறை, பயன்படுத்திய ஊசி, காலாவதியான மருந்துகள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய பொருட்கள், குளுக்கோஸ், மருந்து பாட்டில்கள் போன்ற மருத்துவக் கழிவுகளை அதற்குரிய பெட்டிகளில் கொட்டி வைத்து பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு தமிழகம் முழுவதும் 11 பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
முறையாக மருத்துவக் கழிவு அகற்றப்படுகிறதா என்பதை சுகாதாரத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இனியாவது கண்காணிக்க வேண்டும்.
இதுகுறித்து மருந்து கோடவுன் அலுவலர் செல்வம் கூறியதாவது: குப்பையில் கொட்டப்பட்டுள்ள மாத்திரைகள் கோடவுன் மாத்திரைகள் கிடையாது. அவை காலாவதியான மாத்திரைகள்.
மருந்து கோடவுனில் காலாவதியான மாத்திரைகள் தனி அறையில் வைத்து ஆண்டுக்கு ஒருமுறை தஞ்சாவூர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றன. வெளியே இருந்து வந்து இங்கு அவற்றை கொட்டியுள்ளனர் என்றார்.