ADDED : செப் 18, 2025 05:18 AM
திருப்புபவனம : திருப்புவனம் சன்னதி தெருவில் திருமண மண்டபம் இயங்கி வருகிறது.
பேரூராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த திருமண மண்டபத்திற்கு கோர்ட் உத்தரவுப்படி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் சீல் வைத்தனர்.
மேலும் கோர்ட் உத்தரவுப்படி சீல் வைத்துள்ளதாகவும் அத்து மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.