/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக மீட்பு காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக மீட்பு
காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக மீட்பு
காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக மீட்பு
காணாமல் போன இளைஞர் கிணற்றில் பிணமாக மீட்பு
ADDED : செப் 17, 2025 07:21 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதுாரை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி அழகு மீனாள் 49. இவர் கணவரை பிரிந்து மகன் பாலமுருகன் 22 என்பவருடன் வசித்து வருகிறார்.
செப்.14 பாலமுருகன் ஆடு மேய்ப்பதற்கு சென்றார். அன்று மாலை ஆடுகள் அனைத்தும் வீட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் பாலமுருகன் வீடு திரும்பவில்லை. அழகுமீனாள் உள்ளிட்ட உறவினர்கள் கிராமம் முழுவதும் தேடினர். செப்.15 மதியம் 1:00 மணிக்கு காணாமல் போன தனது மகனை கண்டு பிடித்து தரும்படி அழகுமீனாள் சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரித்தனர். ஒக்கூர் அண்ணாநகர் ஏ காலனி அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள கிணற்றில் பாலமுருகன் இறந்த நிலையில் கிடந்தார்.


