/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மடப்புரத்தை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்புமடப்புரத்தை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
மடப்புரத்தை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
மடப்புரத்தை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
மடப்புரத்தை திருப்புவனத்துடன் இணைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 11, 2024 04:15 AM
திருப்புவனம் : திருப்புவனம் பேரூராட்சியுடன் மடப்புரம் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
திருப்புவனம் பேரூராட்சியுடன் அருகில் உள்ள தட்டான்குளம், லாடனேந்தல், மடப்புரம் ஆகிய கிராமங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேரூராட்சிகளை தரம் உயர்த்தவும் கூடுதல் நிதி ஒதுக்கவும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்காக திருப்புவனம் பேரூராட்சியுடன் அருகில் உள்ள கிராமங்கள் இணைக்கப்படுகிறது.
இந்நிலையில் மடப்புரம் ஊராட்சியை திருப்புவனம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர் சபர்மதிகோபி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், வடகரை, எம்.ஜி.ஆர்., நகர், சுப்ரமணியபுரம், கலுங்குபட்டி உள்ளிட்ட கிராமங்கள்உள்ளன. ஆயிரத்து 600 வீடுகளில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். முற்றிலும் கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் ஊராட்சி இது.
வேலைவாய்ப்பின்றி ஆயிரத்து 600 தொழிலாளர்கள் 100 நாள் திட்டத்தை நம்பியே உள்ளனர். பேரூராட்சியுடன் இணைக்கும் போது 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவை கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே திருப்புவனம்பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பியுள்ளனர்.
ஊராட்சி தலைவர் சபர்மதி கூறுகையில், மடப்புரம் ஊராட்சியில் முழுக்க முழுக்க விவசாய கூலி தொழிலாளர்கள் தான், கலுங்குபட்டி கிராமம் திருப்புவனத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது. இதனை திருப்புவனத்துடன் இணைத்தால்கிராமத்திற்கு உரிய திட்டங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
எனவே மடப்புரம் ஊராட்சியை திருப்புவனத்துடன் இணைக்கும்முடிவை கைவிட வேண்டும், என்றார்