Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பிச்சை எடுக்கும் தகராறில் ஒருவர் கொலை: 3 பேர் கைது

பிச்சை எடுக்கும் தகராறில் ஒருவர் கொலை: 3 பேர் கைது

பிச்சை எடுக்கும் தகராறில் ஒருவர் கொலை: 3 பேர் கைது

பிச்சை எடுக்கும் தகராறில் ஒருவர் கொலை: 3 பேர் கைது

ADDED : ஜன 07, 2024 04:29 AM


Google News
காரைக்குடி: காரைக்குடியில் தியேட்டர் அருகே பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமரா அடிப்படையில் போலீசார் பூமிநாதன் என்பவரை விசாரணை செய்தனர். விசாரணையில் பூமிநாதனின் மனைவி பாகம்பிரியாள் என்பவருக்கும் இறந்த நபரான மூர்த்திக்கும் பிச்சை எடுப்பதில் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் பூமிநாதன் ,நாராயணன் மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மூர்த்தி துாங்கும்போது கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

கஞ்சாவுடன் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே மலம்பட்டி செக்போஸ்டில் தாலுகா இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அந்த வழியாக வந்த சுந்தரநடப்பு முத்துக்குமார் மகன் சந்தோஷ்குமார் என்ற கட்டாரி 22, மதுரை மாவட்டம் வகடம்பட்டி அன்னச்சாமி மகன் விக்னேஷ் 22, மட்டாங்கிபட்டி மூக்கையன் மகன் ரவீந்திரன் 29 மூவரையும் சோதனை செய்துள்ளார். அப்போது 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதில் சந்தோஷ்குமாரையும், விக்னேைஷயும் போலீசார் கைது செய்தனர். தப்பிய ரவீந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பள தகராறு: தாய் மகன் காயம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே இருவணிவயலைச் சேர்ந்தவர் சொர்ணலிங்கம் 40. வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் விஜய் 20, என்பவர் வேலை பார்க்கிறார். விஜய்க்கு பல நாட்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. விஜய் தனது சகோதரர் வினோத் 24,துடன் சொர்ணலிங்கம் வீட்டிற்கு சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. தடுக்க வந்த சொர்ணலிங்கத்தின் தாயார் உமையாளுக்கும் 66, அடி விழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us