/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பாகனேரியில் மஞ்சுவிரட்டு மாட்டு வண்டி பந்தயம்பாகனேரியில் மஞ்சுவிரட்டு மாட்டு வண்டி பந்தயம்
பாகனேரியில் மஞ்சுவிரட்டு மாட்டு வண்டி பந்தயம்
பாகனேரியில் மஞ்சுவிரட்டு மாட்டு வண்டி பந்தயம்
பாகனேரியில் மஞ்சுவிரட்டு மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஜூன் 24, 2024 01:45 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 43 ஜோடிகள் பங்கேற்றன.
இங்கு நடந்த போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டையை சேர்ந்த 43 ஜோடி மாடுகள் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடந்த போட்டியில் பெரிய மாடு பிரிவில் 8 மைல் துாரத்திற்கு 7 ஜோடிகளும், நடு மாடு பிரிவில் 7 மைல் துாரத்திற்கு 6 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 6 மைல் துாரத்திற்கு 20 ஜோடிகளும் ஓடின.போட்டியில் முதல் நான்கு இடத்தை மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இங்கு நடந்த மஞ்சுவிரட்டில் 300 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 16 பேர் காயமுற்றனர்.