/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ரோட்டில் தேங்கும் மழைநீர்: வடிகாலை துார்வார கோரிக்கைரோட்டில் தேங்கும் மழைநீர்: வடிகாலை துார்வார கோரிக்கை
ரோட்டில் தேங்கும் மழைநீர்: வடிகாலை துார்வார கோரிக்கை
ரோட்டில் தேங்கும் மழைநீர்: வடிகாலை துார்வார கோரிக்கை
ரோட்டில் தேங்கும் மழைநீர்: வடிகாலை துார்வார கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 01:45 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுக்கோட்டை ரோட்டில் கண்டவராயன்பட்டி வளைவுக்கு முன் மழை நீர் ரோட்டில் தேங்குகிறது.
நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரியுள்ளனர். திருப்புத்துாரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் ரோட்டில் புதுப்பட்டி அருகில் கண்டவராயன்பட்டி விலக்கு ரோடு பிரிகிறது. அந்த சந்திப்பில் அண்மையில் விரிவாக்கப்பணிகள் நடந்தன.புதிய கான்கிரீட் பாலம் மழைநீர் வடிகால் மூலம் அருகிலுள்ள கண்மாய்க்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னரும் மழை பெய்தால் மழை நீர் ரோட்டின் ஒரு பகுதியில் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. வடிகாலை பராமரித்து அடைப்பு இருந்தால் அகற்றி நீர் விரைவாக வெளியேற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.