ADDED : ஜூன் 24, 2024 01:46 AM
சிவகங்கை : அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிவகங்கை கிளை முன் சி.ஐ.டி.யு.,யினர் வாயிற் கூட்டம் நடத்தினர்.கூட்டத்திற்கு தலைவர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார்.
செயலாளர் சமயத்துரை விளக்க உரை ஆற்றினார். மின்வாரிய தொழிற்சங்க மாநில நிர்வாகி உமாநாத், வெங்கடேசன், கணேசன், பரந்தாமன், பொருளாளர் வாசுதேவன் பங்கேற்றனர். பொது செயலாளர் தெய்வீர பாண்டியன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வீரையா நிறைவுரை ஆற்றினர். முகமது அன்சார் நன்றி கூறினார்.போக்குவரத்து கழகத்தை காக்க, வரவு செலவுக்கான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும், 2003 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். ஜூன் 24 ராமநாதபுரம் புறநகர் பணிமனை முன் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்துவதென தீர்மானித்தனர்.