/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுஅரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 24, 2024 01:46 AM
சிவகங்கை : காளையார்கோவிலில், மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கினார். மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் சிறப்பு வகித்தார்.முன்னாள் அமைச்சர் சிதம்பரம், கார்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்நாதன், மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 10ம் வகுப்பு தேர்வில் 149 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி, பிளஸ் 2 தேர்வில் 77 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பாட ஆசிரியர்கள் 3,539 பேர்களுக்கும் பாராட்டு சான்று, கேடயத்தை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலை) உதயகுமார் நன்றி கூறினார்.