/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரில் சென்று 40 வீடுகளில் திருடியவர் சிக்கினார் நகை, பணம், கார்கள் பறிமுதல் காரில் சென்று 40 வீடுகளில் திருடியவர் சிக்கினார் நகை, பணம், கார்கள் பறிமுதல்
காரில் சென்று 40 வீடுகளில் திருடியவர் சிக்கினார் நகை, பணம், கார்கள் பறிமுதல்
காரில் சென்று 40 வீடுகளில் திருடியவர் சிக்கினார் நகை, பணம், கார்கள் பறிமுதல்
காரில் சென்று 40 வீடுகளில் திருடியவர் சிக்கினார் நகை, பணம், கார்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 01, 2025 12:59 AM

காரைக்குடி: சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரில் சென்று 40 க்கும் மேற்பட்ட பூட்டப்பட்ட வீடுகளை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, குன்றக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளை உடைத்து தொடர் திருட்டு நடந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
காரைக்குடி தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது முக்கிய ரோடுகளை பயன்படுத்தாமல் குறுகிய தெருக்கள் வழியாக கார் ஒன்று அடிக்கடி வந்து செல்வது தெரிந்தது. நேற்று அந்தக்காரை போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். காரை நிறுத்தி விசாரித்த போது அதை ஓட்டியவர் விருதுநகர் மாவட்டம் சூளக்கரையைச் சேர்ந்த பாலு மகன் பொன்ராஜ் என்ற பொன்னையா 44, என்பதும் தெரிந்தது.
தீவிரமாக விசாரித்த போது இரு மாவட்டங்களிலும் 40க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து அவர் திருடியதும் தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 46 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ.14 லட்சம், திருட பயன்படுத்திய கார், திருட்டு பணத்தில் வாங்கிய 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.