/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 3 கார்கள் பறிமுதல் காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 3 கார்கள் பறிமுதல்
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 3 கார்கள் பறிமுதல்
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 3 கார்கள் பறிமுதல்
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 3 கார்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 01, 2025 01:44 AM

காரைக்குடி:சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரில் சென்று, 40க்கும் மேற்பட்ட பூட்டப்பட்ட வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, குன்றக்குடி மற்றும் புதுக்கோட்டை எல்லை பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து தொடர் திருட்டு நடந்தது.
காரைக்குடி தனிப்படை போலீசார் விசாரணையில், குறுகிய தெருக்கள் வழியாக கார் ஒன்று அடிக்கடி வந்து செல்வது தெரிந்தது. நேற்று, அந்த காரை போலீசார் பின்தொடர்ந்து சென்று, நிறுத்தி விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டம், சூளக்கரையைச் சேர்ந்த பொன்னையா, 44, காரில் இருந்தார்.
அவர் இரு மாவட்டங்களிலும், 40க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து திருடியது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, 46 சவரன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், 14 லட்சம் ரூபாய், திருட பயன்படுத்திய கார், திருட்டு பணத்தில் வாங்கிய இரு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.