ADDED : ஜூன் 01, 2025 12:59 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திராநகர் காளிமுத்து மனைவி பாக்கியம் 55. இவர் நேற்றுமுன்தினம் கல்லலில் கடையில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக , வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு அங்கு நடந்து சென்றார்.
அவரை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற இருவர் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த கல்லல் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்டதாக கல்லல் பாண்டியன் மகன் சுபாஸ்ரீ 22, முத்து மகன் கஜேந்திரனை 23 , கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.