/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார் பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்
பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்
பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்
பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் புகார்
ADDED : ஜூன் 06, 2025 03:01 AM
காரைக்குடி:அரசியல்வாதி பழ. கருப்பையா மீது இயக்குனர் கரு. பழனியப்பன் காரைக்குடி டி.எஸ்.பி., பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார்.
கரு. பழனியப்பன் அளித்துள்ள புகார்:
2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்தேன். இதனால் என் தந்தையின் மூத்த சகோதரர் பழ. கருப்பையா குடும்பத்திடம் இருந்தும் உறவினர்களிடமிருந்தும் உங்களை தனிமைப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார். என் வீட்டாரின் சம்மதம் இருந்ததால் திருமணம் செய்து கொண்டேன்.
21 வருடமாக என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக்கூடாது என்று எனது உறவினர்களுக்கு அவர் அழுத்தம் தருகிறார். ஜாதிய வன்கொடுமையை இன்று வரை பல்வேறு நிகழ்வுகளில் செய்து வருகிறார். தற்போது ஒரு சதாபிஷேகத்திற்கு என்னை அழைக்கக்கூடாது என விழா நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
காரைக்குடியில் உள்ள எங்களது பூர்வீக வீடு சேதமாகியுள்ளது. அதை பராமரிப்பு செய்ய விடாமல் தடுக்கிறார். பொய்யான புகார்களை கொடுத்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். எனவே ஜாதிய வன்கொடுமை செய்து வரும் பழ.கருப்பையாவிடமிருந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.