/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி :போலீசார் விசாரணை சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி :போலீசார் விசாரணை
சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி :போலீசார் விசாரணை
சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி :போலீசார் விசாரணை
சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி :போலீசார் விசாரணை
UPDATED : ஜூன் 06, 2025 04:23 AM
ADDED : ஜூன் 06, 2025 03:03 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண்ணிடம் ஏப்.12 ஆம் தேதி ஒருவர் வாட்ஸ் ஆப்பில் பேசினார். அவர் தன்னை முதலீட்டு ஆலோசகராக காட்டிக் கொண்டார். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று கூறினார். அதை நம்பிய அந்த பெண் அவர் கூறிய 11 வங்கி கணக்கில் 29 பரிவர்த்தனைகளில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தொகை கொடுக்கவில்லை. அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சிவகங்கையில் 29 வயது இளைஞரிடம் மார்ச் 12ஆம் தேதி வாட்ஸ் ஆப்பில் அடையாளம் தெரியாத ஒருவர் பேசினார். அவர் ஆன்லைனில் முதலீடு செய்து பகுதி நேர வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று இளைஞரை நம்ப வைத்தார். அவர் பேசியதை நம்பிய இளைஞர் அவர் கூறிய 8 வங்கி கணக்கில் 12 பரிவர்த்தனைகளில் ரூ.6 லட்சத்து 27 ஆயிரம் அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபரை பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
மற்றொரு 35 வயது இளைஞரிடம் 2024 பிப்.24ஆம் தேதி ஒருவர் வாட்ஸ் ஆப்பில் பேசியுள்ளார். பேசிய நபர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த இளைஞர் 8 வங்கி கணக்கில் 16 பரிவர்த்தனைகளில் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றினார்.
பெண்ணிடம் 6 லட்சம் மோசடி
சிவகங்கை அருகே வசிப்பவர் 35 வயது பெண். ஜன.1ஆம் தேதி அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒருவர் செய்தி அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் உள்ளே செல்லவும் அந்த பெண்ணை டெலிகிராமில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். டெலிகிராமில் பேசிய நபர் அவர் கூறிய வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று கூறி பெண்ணை நம்ப வைத்தார். அவர் கூறிய 2 வங்கி கணக்கில் 2 பரிவர்த்தனைகளில் ரூ.2 லட்சத்தை அனுப்பினார். பணத்தை பெற்ற நபர் லாபத்தொகை தராமல் ஏமாற்றினார். அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் பகார் அளித்தார்.
இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.