/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காளையார்கோயிலில் நகை கொள்ளை; குற்றவாளிகளை பிடிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்காளையார்கோயிலில் நகை கொள்ளை; குற்றவாளிகளை பிடிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
காளையார்கோயிலில் நகை கொள்ளை; குற்றவாளிகளை பிடிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
காளையார்கோயிலில் நகை கொள்ளை; குற்றவாளிகளை பிடிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
காளையார்கோயிலில் நகை கொள்ளை; குற்றவாளிகளை பிடிக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2024 11:36 PM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே கல்லுவழி சின்னப்பன் உட்பட 5 பேரை இரும்பு ராடால் தாக்கி 60 பவுன் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என பார்வக குல சங்க நிர்வாகிகள் அமைச்சர் பெரியகருப்பனிடம் வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே கல்லுவழி மரக்கடை உரிமையாளர் சின்னப்பன் 75. இவரது மனைவி உபகாரமேரி 65, மருமகள் வேதபோதக அரசி 30, பேத்தி ஜெர்லின் 12, பேரன் ஜோவின் 10. ஜன., 26 அன்று அதிகாலை 3:00 மணிக்கு இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் இவர்களது வீட்டிற்குள் சென்ற நபர்கள் 5 பேரையும் கடுமையாக தாக்கி, பீரோவில் இருந்த 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை, காளையார் கோவில் அருகே முடுக்கூரணி ஆகிய இடங்களில் ஒரே ஸ்டைலில் கொள்ளை நடந்ததால், காளையார்கோவில் மக்கள் அன்றைய தினம் மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் எஸ்.பி., பி.கே., அர்விந்த் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களை கண்டித்து காளையார்கோவிலில் பிப்., 5 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பார்கவ குல சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித், அமைச்சர் பெரியகருப்பன், எஸ்.பி., பி.கே., அர்விந்த் ஆகியோர் தலைமையில் பார்கவ குல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கொள்ளையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளியை மட்டுமே கைது செய்ய வேண்டும்.
காளையார்கோவில் ஸ்டேஷனை இரண்டாக பிரித்து, மறவமங்கலத்தில் அரசு விரைவில் ஸ்டேஷன் திறக்க வேண்டும்.
காளையார்கோவிலில் போலீஸ் பற்றாக்குறையை போக்க வேண்டும் என வலியுறுத்தினர். பிப்., 5ம் தேதி போராட்டம் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து கிராம மக்களிடம் பேசி தீர்வு காண உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இது குறித்து எஸ்.பி., பி.கே., அர்விந்த் கூறியதாவது, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம். தனிப்படைகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளது, என்றார்.