Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அதிமுக உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் திடீர் பாசம்

அதிமுக உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் திடீர் பாசம்

அதிமுக உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் திடீர் பாசம்

அதிமுக உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் திடீர் பாசம்

ADDED : ஜூன் 27, 2024 03:38 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக சட்டசபையில் விவாதிக்க வேண்டுமென்ற அ.தி.மு.க.,வின் கோரிக்கையை நிராகரித்து, பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் சட்டசபை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலை. பா.ஜ., அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us