/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சத்துணவு மைய மாணவர்களுக்கான உணவூட்டும் மானிய தொகை அதிகரிப்பு * ஆண்டுக்கு ரூ.61 கோடி கூடுதல் செலவு சத்துணவு மைய மாணவர்களுக்கான உணவூட்டும் மானிய தொகை அதிகரிப்பு * ஆண்டுக்கு ரூ.61 கோடி கூடுதல் செலவு
சத்துணவு மைய மாணவர்களுக்கான உணவூட்டும் மானிய தொகை அதிகரிப்பு * ஆண்டுக்கு ரூ.61 கோடி கூடுதல் செலவு
சத்துணவு மைய மாணவர்களுக்கான உணவூட்டும் மானிய தொகை அதிகரிப்பு * ஆண்டுக்கு ரூ.61 கோடி கூடுதல் செலவு
சத்துணவு மைய மாணவர்களுக்கான உணவூட்டும் மானிய தொகை அதிகரிப்பு * ஆண்டுக்கு ரூ.61 கோடி கூடுதல் செலவு
ADDED : ஜூன் 01, 2025 10:58 PM
சிவகங்கை:தமிழகத்தில் பள்ளி சத்துணவு மையத்தில் மாணவருக்கான உணவூட்டும் மானிய தொகையை அரசு உயர்த்தியுள்ளதால், ஆண்டுக்கு உணவூட்டும் மானிய தொகை ரூ.61.61 கோடி அரசுக்கு கூடுதல் செலவினமாகும் என தெரிவித்துள்ளனர்.
தமிழக அளவில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் செயல்படும் 43,131 சத்துணவு மையங்களில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக அரிசி தவிர்த்து மற்ற பொருட்களான பருப்பு, எண்ணெய், பச்சை பயறு, உப்பு, எரிபொருள், முட்டைக்கு உணவூட்டு செலவினமாக அரசு நாள் ஒன்றுக்கு (தொடக்க பள்ளி) ரூ.5.45, நடுநிலை, உயர் நிலை பள்ளி மாணவருக்கு ரூ.8.17 வரை வழங்கி வருகிறது. இந்நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப உணவூட்டும் மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு சங்கத்தினர் அரசுக்கு ஆர்ப்பாட்டங்கள் மூலம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அரசின் சமூக நலத்துறை மாணவர் உணவூட்டும் மானிய தொகையை ஒரு மாணவருக்கு (தொடக்க பள்ளி) ரூ.6.19, (நடுநிலை, உயர்நிலை பள்ளி) ரூ.9.29 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு உணவூட்டும் ஊக்கத்தொகை செலவினம் ஆண்டுக்கு ரூ.61.61 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதியில் 60 சதவீத பங்கை மத்திய அரசும், மாநில அரசு 40 சதவீத பங்கு தொகையை விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.* சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்:
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி கூறியதாவது: சமையல் பொருட்கள், முட்டை விலைவாசி உயர்வு காரணமாக, மாணவர்களுக்கு வழங்கும் உணவூட்டும் மானிய தொகையை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. இதன் மூலம் தொடக்க பள்ளி மாணவருக்கு தலா 74 பைசாவும், நடுநிலை, உயர்நிலை பள்ளி மாணவருக்கு தலா ரூ.1.12 வீதம் உயர்ந்துள்ளது. அரசிடம் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.