/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிரஷர், கிராவல் மண் எடுத்து செல்லும் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி கட்டாயம்: கனிம வளத்துறை எச்சரிக்கை கிரஷர், கிராவல் மண் எடுத்து செல்லும் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி கட்டாயம்: கனிம வளத்துறை எச்சரிக்கை
கிரஷர், கிராவல் மண் எடுத்து செல்லும் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி கட்டாயம்: கனிம வளத்துறை எச்சரிக்கை
கிரஷர், கிராவல் மண் எடுத்து செல்லும் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி கட்டாயம்: கனிம வளத்துறை எச்சரிக்கை
கிரஷர், கிராவல் மண் எடுத்து செல்லும் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி கட்டாயம்: கனிம வளத்துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 03:16 AM
சிவகங்கை, ஜூலை 3-மாவட்ட அளவில் கிரஷர், கிராவல் குவாரிகளில் செயல்படும் டிப்பர் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி பொருத்தினால் மட்டுமே ‛பெர்மிட்' வழங்கப்படும் என கனிம வளத்துறை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் பாறை சரிந்த விபத்தில் 6 பேர் பலியாகினர்.
இதையடுத்து அந்த உரிமையாளரின் 2 கிரஷர் குவாரிகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இன்னும் 3 கிரஷர் குவாரிகள் சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இது தவிர அனுமதி பெற்றும், பெறாமலும் ஏராளமான இடங்களில் கிராவல் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து ஜல்லிக்கற்கள், கிராவல் மண்ணை டிப்பர் லாரிகளில் எடுத்து செல்ல, நடைச்சீட்டு அடிப்படையில் கனிம வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். நடைச்சீட்டில் குறிப்பிடப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே டிப்பர் லாரிகளில் இவற்றை எடுத்து செல்ல வேண்டும். வழித்தடம் மீறி கிரஷர் குவாரி கற்கள், கிராவல் மண்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் கனிம வளத்துறை செயல்பட்டு வருகிறது.* டிப்பர் லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி: மாவட்ட அளவில் செயல்படும் கிரஷர், கிராவல் குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகளில் ஜல்லி, கிராவல் மண் எடுத்து செல்ல அனுமதி சீட்டினை பெற, லாரிகளில் ‛ஜி.பி.எஸ்.,' கருவி பொருத்த வேண்டியது கட்டாயம் என குவாரி உரிமையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கனிம வளத்துறை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இக்கருவி பொருத்தினால் மட்டுமே லாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. * ‛ஜி.பி.எஸ்.,' கருவிக்கு தான் பெர்மிட்: கனிம வளத்துறை அதிகாரி கூறியதாவது, டிப்பர் லாரிகளில் கண்டிப்பாக ‛ஜி.பி.எஸ்.,' கருவி பொருத்த வேண்டும். இக்கருவி உள்ள லாரிகளுக்கு மட்டுமே ‛பெர்மிட்' தருவோம். இதன் மூலம் கனிம வளம், வருவாய், போக்குவரத்து துறைகள் முறைப்படி கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு, உரிய விதிப்படி லாரிகள் சென்று வருகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ///