Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இளையான்குடி,மானாமதுரை ஒன்றியத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததால் பாதிப்பு

இளையான்குடி,மானாமதுரை ஒன்றியத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததால் பாதிப்பு

இளையான்குடி,மானாமதுரை ஒன்றியத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததால் பாதிப்பு

இளையான்குடி,மானாமதுரை ஒன்றியத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததால் பாதிப்பு

ADDED : ஜூலை 03, 2025 03:17 AM


Google News
இளையான்குடி: இளையான்குடி,மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய வேலை உறுதி திட்ட நிதி ரூ.40 கோடிக்கு மேல் ஒப்பந்ததாரர்களுக்கு விடுவிக்காததால் தொடர்ந்து பணிகள் நடப்பதில் சிக்கல் உள்ளது.

இளையான்குடி,மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் கிராம மக்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.மேலும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மெட்டல் ரோடு, பேவர் பிளாக் ரோடு,ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடங்கள், கண்மாய் மடைகள் சிறு பாலங்கள், ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ரூ.4034 கோடியை மத்திய அரசு பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைத்திருந்த நிலையில் 100 நாள் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமும், ஒப்பந்ததாரர்களுக்குரிய பணமும் வழங்கப்படாமல் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த மாதம் மத்திய அரசு ரூ. 2999 கோடியை விடுவித்தது.இதனைத் தொடர்ந்து 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மட்டும் தற்போது ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இளையான்குடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ரூ. 40 கோடிக்கு மேல் உள்ள தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு விடுவிக்காததால் அவர்களால் பிற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: 8 மாதத்திற்கும் மேலாக 40 கோடிக்கு மேற்பட்ட நிதியை விடுவிக்காததால் ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களும் வட்டி கட்ட முடியாமல் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதனால் மற்ற பணிகளையும் எடுத்து செய்ய முடியாத நிலையில் உள்ளதால் இத்தொழிலை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு முழு தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை என கூறும் நிலையில் ஒதுக்கிய தொகைக்கேற்ப சிறிய அளவிலான தொகையையாவது ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நிதியை விடுவிக்க கோரி உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் தமிழக முழுவதும் இந்த நிலை நீடித்து வருகிறது. நிதி வந்தவுடன் அவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us