Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/புத்தக திருவிழாவில் 20 பேருக்கு ரூ.500 மதிப்பில் இலவச புத்தகம்

புத்தக திருவிழாவில் 20 பேருக்கு ரூ.500 மதிப்பில் இலவச புத்தகம்

புத்தக திருவிழாவில் 20 பேருக்கு ரூ.500 மதிப்பில் இலவச புத்தகம்

புத்தக திருவிழாவில் 20 பேருக்கு ரூ.500 மதிப்பில் இலவச புத்தகம்

ADDED : ஜன 29, 2024 05:47 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை மன்னர்மேல்நிலை பள்ளி வளாகத்தில் பிப்., 6 வரை நடக்கும் புத்தக கண்காட்சியில், தினமும் 20 பேர்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என பபாசி செயலாளர் எஸ்.கே., முருகன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறையுடன் பபாசி இணைந்து 3ம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருவிழாவை நடத்துகிறது. கண்காட்சி நுழைவு வாயிலில் வாசகர்களுக்கு கூப்பன் வழங்கப்படும். அதில் பெயர், அலைபேசி எண்ணை எழுதி பெட்டியில் போட வேண்டும். தினமும் குலுக்கல் மூலம் 20 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான இலவச புத்தகங்களை வெற்றியாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

ஜன., 27 அன்று நடந்த குலுக்கலில் ஆன்சலின் ஏஞ்சல், எஸ்.பாலா, எஸ்.ரேவதி, வி.பி.ஜெ., ஆர்.அக்னிசெல்வம், பி.ராஜீவ் காந்தி, என்.ரித்திக்சனா, கே.சிவசக்தி, கே.ரகுநாதன், எம்.சந்தியா, கே.தியாஸ்ரீ, வி.மனோஜ்குமார், தி.ராஜ்குமார், எஸ்.ேஹமமாலினி, எம்.வெற்றி, வி.யஷ்வந்த் பாண்டி, எஸ்.பாக்கியலட்சுமி, வி.பொன்மணி, டி.முகேஸ்வரன், பி.திருவேணி ஆகியோர் பெற்றனர், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us