/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் போட்டி தேர்வு மையத்தில் ஆய்வுசிவகங்கையில் போட்டி தேர்வு மையத்தில் ஆய்வு
சிவகங்கையில் போட்டி தேர்வு மையத்தில் ஆய்வு
சிவகங்கையில் போட்டி தேர்வு மையத்தில் ஆய்வு
சிவகங்கையில் போட்டி தேர்வு மையத்தில் ஆய்வு
ADDED : பிப் 05, 2024 11:47 PM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள போட்டி தேர்வுக்கான படிப்பு வட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா ஆய்வு செய்தார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக ஆர்ச் அருகே அரசின் போட்டி தேர்வுக்கான இலவச படிப்பு வட்டம் செயல்படுகிறது. இங்கு பல பட்டதாரிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு பாட வாரியாக பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு தேவையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், இங்கு கூடுதல் புத்தகங்கள் வாங்கும் பட்சத்தில் எந்தவிதமான புத்தகங்கள் படிப்பு வட்டத்திற்கு அவசிய தேவையாக உள்ளது என்பது குறித்து மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, உதவி திட்ட அலுவலர் (கணக்கு, நிர்வாகம்) விஷ்ணுபரண் ஆய்வு செய்தனர். படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.