/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்சிவகங்கையில் நின்று செல்ல வலியுறுத்தல் எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்சிவகங்கையில் நின்று செல்ல வலியுறுத்தல்
எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்சிவகங்கையில் நின்று செல்ல வலியுறுத்தல்
எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்சிவகங்கையில் நின்று செல்ல வலியுறுத்தல்
எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்சிவகங்கையில் நின்று செல்ல வலியுறுத்தல்
ADDED : மே 27, 2025 01:01 AM
சிவகங்கை: எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வரையிலான வாரம் இரு முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கையில் நின்று செல்ல பரிந்துரைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்: 16361) வாரம் இரு முறை எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு செல்கிறது. அதே போன்று வேளாங்கண்ணியில் இருந்து (வண்டி எண்: 16362) எர்ணாகுளத்திற்கும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நிற்காது.
இதனால், வேளாங்கண்ணி, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். எனவே இந்த ரயிலை சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதே போன்று அகமதாபாத் - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - பனாரஸ் (வண்டி எண்:22535) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களையும் சிவகங்கையில் நிறுத்தி செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த இரு ரயில்களையும் சிவகங்கையில் நின்று செல்ல ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.