/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தி.வடகரையில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தி.வடகரையில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
தி.வடகரையில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
தி.வடகரையில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
தி.வடகரையில் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED : மே 27, 2025 01:02 AM

திருப்புவனம்: திருப்புவனம் வடகரை எல்லை காத்த மாரியம்மன் கோயிலில் 31ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் வடகரையில் இருந்து அக்னிசட்டி எடுத்து நேற்று ஊர்வலமாக திருப்புவனம் புதுார் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். இரண்டாம் நாளான இன்று காலை ஏழு மணிக்கு பால்குட ஊர்வலமும், நாளை (புதன்கிழமை) மாலையில் முளைப்பாரி உற்ஸவமும், வியாழக்கிழமை அன்னதானமும் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை வடகரை கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.