ADDED : ஜன 07, 2024 04:30 AM
காரைக்குடி: விசாலையன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர்களை அரசு உயர் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் நன்னெறிகளை ஊக்குவிக்கும் வகையில் மனம் விட்டு மனம் என்னும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையேற்றார்.
வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவினை இறையன்பு திறந்து வைத்தார்.
கல்லூரி தாளாளர் சேதுகுமணன் பேராசிரியர் கருணாநிதி இயக்குனர் ஸ்டெல்லா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்றனர்.