கழிவுநீர் குட்டையால் ஊழியர்கள் அவதி
கழிவுநீர் குட்டையால் ஊழியர்கள் அவதி
கழிவுநீர் குட்டையால் ஊழியர்கள் அவதி
ADDED : ஜூன் 24, 2024 01:41 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் குட்டையால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூக்கை பிடித்துக் கொண்டே பணியாற்ற வேண்டியுள்ளது. இப்பேரூராட்சியில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தெற்குரத வீதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகம் முன் பல வருடங்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வரும் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூக்கை பிடித்துக் கொண்டே பணியாற்ற வேண்டி உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.