ADDED : பிப் 24, 2024 04:03 AM
தேவகோட்டை : தேவகோட்டை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சிவபாலன். 53. இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இரண்டு மகள்களில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
திருமணமான மகளும் தற்போது இங்கு தான் இருக்கிறார். இந்நிலையில் சிவபாலனுக்கு குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
நேற்று முன்தினம் மனைவி அருந்ததி மற்றும் மகள்களும் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவபாலன் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.